பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும்: புனானை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திறப்பு விழாவில் ஜனாதிபதி

Date:

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

இதன்போது, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இலங்கையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மேலும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வையொட்டி நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...