பங்களாதேஷில் போராட்டத்தின் எதிரொலி : பதவி விலகினார் உச்ச நீதிமன்ற நீதிபதி

Date:

மாணவர் அமைப்பினரின் தீவிர போராட்டத்தால் பங்களாதேஷின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1971 பாகிஸ்தான் போரால் உயிரிழந்த வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக மாணவர் அமைப்பினர் அண்மையில் போராட்டம் நடத்தினர்.

 

மாணவர் அமைப்பினரின் இந்த போராட்டத்துக்கு பணிந்த ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவில் அடைக்கலமானார்.

இதையடுத்து மாணவர் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ்  இடைக்கால அரசின் தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளராக கூறப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

 

இந்த கோரிக்கையுடன் வங்கதேச உச்சநீதிமன்றத்திற்குள் நுழைந்த மாணவர்கள், தலைமை நீதிபதி ஒரு மணி நேரத்தில் பதவி விலக கெடு விதித்த நிலையில், நெருக்கடி அதிகரித்தமையினால் பதவி விலகுவதாக அறிவித்து ஒபைதுல் ஹாசன் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...