ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

Date:

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களுக்கு அரச செலவில் விமானப்படை உலங்கு வானூர்திகள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக அதனை பயன்படுத்த முடியாதென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கையில், “அரச விமானங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தினால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும்.

எவ்வாறாயினும், ஏனைய தேர்தல் அல்லாத உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு விமானங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நபர்கள் அரசாங்க விமானங்களைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகளை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தினால் அதற்கும் பணம் செலுத்தி பற்றுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அரசாங்க சொத்துக்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை தேர்தல் தொடர்பில் ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...