பங்களாதேஷில் வெடிக்கும் போராட்டம் : இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

Date:

பங்களாதேஷிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி மாணவ அமைப்பினர் வன்முறை போராட்டத்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அத்தோடு, நேற்றைய தினமும் (04) ஆயிர்க்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் வன்முறை மோசமடைந்து வருவதை கருத்தில் கொண்டு தலைநகர் டாக்காவில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில்,  பங்களாதேஷில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள போதிலும் நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் பாதிக்கப்படவில்லை என பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 2,500 இலங்கையர்கள் பங்களாதேஷில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் ஒட்டுமொத்த இலங்கை சமூகமும் பாதுகாப்பாக இருப்பதாக உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது.

 

மேலும், பங்களாதேஷில் உள்ள இலங்கையர்களில் தற்போது ஒன்பது மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதாகவும் இவர்களில் எட்டு மாணவர்கள் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ளதுடன் மீதமுள்ள மாணவர் பாதுகாப்பாக டாக்காவில் உள்ள உறவினர்களுடன் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...