‘பலஸ்தீனம் பலஸ்தீனர்களுக்கே’: இஸ்ரேலின் தாக்குதல்களை தடுக்க இந்தியா குரல் கொடுக்குமாறு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Date:

பலஸ்தீனத்தில் இஸ்ரேல், அமெரிக்காவின் போர் மற்றும் இனப் படுகொலைகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாநில செயலாளர் இரா.முத்தரசன், தேசிய குழு உறுப்பினர் கே.சுப்பராயன் எம்.பி., துணை செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய குழு உறுப்பினர் வஹிதா நிஜாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

இவ்வார்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் பங்கேற்று பேசியதாவது,

இஸ்ரேல், பலஸ்தீன மக்களுக்கு எதிராக கடந்த 10 நாட்களாக கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. பலஸ்தீனத்தில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டின் முதல் பிரதமரான நேரு காலம் தொடங்கி பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து இந்தியா ஆதரவு நிலை எடுத்தது. ஆனால், இப்போது மத்தியில் உள்ள பாஜக அரசு இஸ்ரேலில் உள்ள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படுவது, இந்தியாவின் அணி சேரா கொள்கைக்கு நேர் எதிரான கொள்கையாகும்.

இதுவரை அத்தகைய கொள்கையை நாம் பின்பற்றியது கிடையாது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...