பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Date:

முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருட காலத்திற்கு பணி இடைநிறுத்தமும் செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதில் ஏ. எச். எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 4 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2010 இல், ஏ. எச். எம் ஃபௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, ​​நெதர்லாந்திலிருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியதாகவும் நிதியமைச்சு வாகனத்தின் பராமரிப்புக்காக சுமார் 10 இலட்சம் ரூபா பணம் செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் ஒதுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...