அதிகரிக்கும் குரங்கம்மை நோய்த்தாக்கம் : சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு

Date:

உலக சுகாதார அமைப்பு குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது,

நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விடயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.

இதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

 

இதன்படி, நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, காங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்து உள்ளன.

 

 

14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசானது பரவி வருகிறது.

காங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனினும், ஆப்பிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன.

 

Popular

More like this
Related

O/L பரீட்சாத்திகளுக்கென இன்றும் இயங்கும் ஆட்பதிவு திணைக்களம்

17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களில்  இதுவரை...

‘புதிய கல்வி சீர்திருத்தங்கள் தேவையானதே’ என்பதனை அழகிய முறையில் தெளிவுபடுத்திய புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் ஒன்றுகூடல்!

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தேசிய அளவில்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்...

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...