சவூதிஅரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: பல பகுதிகளில் வெள்ளம்

Date:

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் கடந்த வாரம் நிலவிய மோசமான வானிலையை தொடர்ந்து, தற்போது சவூதி அரேபியாவும் சீரற்ற வானிலையால் பாதிப்படைந்து வருகிறது. இதன் காரணமாக ராஜ்ஜியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தற்போது சவூதி அரேபியாவில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக முஸ்லிம்களின் புனித பூமிகளில் ஒன்றான மதீனா,முனவ்வரா பிரதேசத்தில் கடும் மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தின் விளைவாக மஸ்ஜிதுன் நபவினுடைய சூழவுள்ள பகுதிகள் அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளமையை வீடியோக்கள் மூலம் காணப்படுகின்றது. மதீனாவில் பல கட்டடங்கள், வாகனங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

இது மதீனாவில் ஏற்பட்ட வரலாற்றில் இடம்பெறாதளவுக்கு பாரிய சேதங்களை கொண்ட வெள்ள அனர்த்தமாக பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் சவூதி அரேபியாவின் அஸீர் என்ற பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக  ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் மரணித்துள்ளார்கள்.

மற்றுமொரு பகுதியில் பாடசாலையொன்றின் அதிபரும் அவரின் மனைவியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சவூதி தேசிய வானிலை ஆய்வு மையம் மதீனா பகுதியில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் அதிவேக காற்றுடன் கூடிய அதிக மழை என வானிலை மேலும் தீவிரமடையும் என்று கணித்துள்ளதால், அப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. அத்துடன் மோசமான வானிலை ராஜ்யம் முழுவதும் பல்வேறு பகுதிகளை தொடர்ந்து பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://x.com/Arabbeau/status/1785066242140676469?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1785066242140676469%7Ctwgr%5E24420d9e1657492de1cc0075dc4fd55f853c2056%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.khaleejtamil.com%2F2024%2F04%2Fsaudi-arabia-slashed-by-heavy-rain-medina-under-red-alert%2F

 

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...