அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சவூதி அரேபியத் தலைவர்கள்!

Date:

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டதற்கு சவூதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அரசியலமைப்புப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அரசியலமைப்புப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு, பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் மொஹமட் பின் சல்மானும் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...