விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களும் இரத்து

Date:

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் படி, குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றையதினம் (03) வெளியிட்டுள்ளது.

விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதேவேளை, அண்மையில் சிறிய நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை ஏக்கருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக உயர்த்துவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் கடந்த மாத தொடக்கத்தில் சிறு நெல் விவசாயிகளுக்கு நடப்பு பயிர்ச்செய்கைப் பருவத்துக்காக இரண்டு ஏக்கர் வரையிலான ஏக்கருக்கு 15,000 ரூபா வழங்குவதற்கு  அமைச்சரவை தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...