நாளை வெள்ளிக்கிழமை (13) ஜும் ஆ குத்பாவில் உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
பலஸ்தீன் மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலவ எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவிடம் பிரார்த்திக்குமாறு சகல கதீப்மார்களையும் ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கிறது.