சமூக நீதிக் கட்சியின் தவிசாளர், அங்கத்தவர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து விலகுவதாக சிராஜ் மஷ்ஹூர் அறிவிப்பு

Date:

சமூக நீதிக் கட்சியின் தவிசாளர் மற்றும் அங்கத்தவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் இராஜினாமா செய்துள்ளதாக சிராஜ் மஷ்ஹூர் அறிவித்துள்ளார்.

சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா மொஹமட் அவர்களிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன் சமூக நீதிக்கட்சி, தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியிருந்த ஆதரவை வாபஸ் பெற்றிருந்த நிலையில் அதற்கு பின்னர் தேசிய மக்கள் சக்திக்கு சார்பான பதிவுகளையும் பேஸ்புக் தளத்தில்  பதிவிட்டு வந்தநிலையிலே தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இதற்கு முன்னர் தேசிய சூறா சபையின் தலைவரும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினுடைய கூட்டமொன்றின் மேடையில் ஏறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் அவரும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...