சுதந்திரமானதும் நியாயமானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் கண்டியில் வன்முறைகளை கட்டுப்படுத்தவும் ஸ்டிக்கர் பிரசார விழிப்புணர்வொன்று கண்டி மக்கள் சபையால் கண்டி நகரில் கடந்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது தேர்தலின் நியாயமான மற்றும் சுதந்திரமானதுமான தேர்தலை வலியுறுத்தியும் ஸ்டிக்கர்கள்,போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மக்கள் இடையேயான விழிப்புணர்வை மேம்படுத்தி, தேர்தல் முறையை சிறப்பாகச் செயல்படுத்த உதவுவதுடன், வன்முறைகளுக்கு எதிரான சமூக அக்கறையை தூண்டும் முயற்சியாகும்.
மேலும் நிகழ்ச்சியில் மக்கள், அரசியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, சட்டவிரோதமான முறைகளை பின்பற்றாதது மற்றும் சட்டத்திற்கேற்ற முறையில் தேர்தல் நடத்துவது அவசியமாகும் என்ற கருத்துக்களை முன்வைத்தனர்.