தேர்தல் முடிவுகள் எதுவாகயிருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடைய அணியில் இருக்க கிடைத்ததையிட்டு அளவற்ற பெருமிதம் அடைந்ததாக வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வெளியிலிருந்து விமர்சிப்பது இலகுவானது, ஆனால் பெரும் ஊக்கத்துடன் சவால்களை தோளில் சுமப்பது மிகவும் கடினமானது, நாட்டுக்கு அவசியமான நிலையில் அவர் முன்வந்ததும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அவருடன் பணியாற்றியதும் பெருமிதம் கொள்ள செய்கிறது எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.