மாணவக் குழுக்களிடையே மோதல்: தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம்!

Date:

இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலை 6 மணிமுதல் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...