வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை!

Date:

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய அந்த பேருந்துகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

மேலும் தேர்தல் தொடர்பான பொலிஸ் பணிகளுக்காக 175 பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை, வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இன்றும் (20) நாளையும் (21) விசேட தொலை தூர பேருந்து சேவையொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசந்துறைக்கும் இடையில் இன்று விசேட புகையிரதத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளை மறுதினம் 21ம் திகதியும் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கசந்துறை வரையிலும், நாளை மற்றும் 22ம் திகதிகளில் காங்கசந்துறையில் இருந்து கொழும்பு வரையிலும் இந்த ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அநுராதபுரத்திற்கும் மஹவவிற்கும் இடையிலான வீதியின் பழுதடைந்த நிலை காரணமாக புகையிரதம் இயங்காது என புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...

குழந்தைகளுக்கென அறிமுகமாகும் போசனைத் திட்டம்

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த ஊட்டச்சத்து நிலையை...

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...