சில தினங்களுக்கு முன் ஜோர்தானைச் சேர்ந்த ஒரு முன்னாள் இராணு வீரர், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று சாரதியாக பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் ஜோர்தானிய- இஸ்ரேல் எல்லையில் வைத்து இஸ்ரேல் இராணுவத்தினரை சுட்டுக்கொன்ற சம்பவம் ஜோர்தானிலும் சர்வதேச மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் மகேர் அல்-ஜாஸி என்ற ஜோர்தானிய இளைஞர் அந்த இடத்திலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
அவருடைய உடல் இஸ்ரேலுடைய இராணுவத்தினரால் இராஜதந்திர முயற்சிகளை தொடர்ந்து, ஜோர்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த சம்பவமானது முழு ஜோர்தானிலும் மிகப்பெரிய ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள மக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இந்த ஜோர்தானிய இளைஞருடைய இந்த செயலை வெற்றிகரமான அல்லது ஒரு மிகச்சிறந்த ஒரு செயலாக அவர்கள் பார்ப்பதோடு, இஸ்ரேலிய வீரர்களை சுட்டுக்கொலை செய்த மகேர் அல்-ஜாஸி உடைய குடும்பத்தார் மீது அவர்கள் தங்களுடைய ஆறுதலையும், மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவிக்கின்ற நிகழ்வுகள் அன்றாடம் அங்குள்ள ஊடகங்கள் வாயிலாக நடந்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த நிலையில் இஸ்ரேலுடைய இராணுவத்தினரால் ஜோர்தானிய அரசின் மூலமாக குடும்பத்தாருக்கு ஒப்படைக்கப்பட்ட ஜனாசா அவருடைய சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்த வேளையிலே அவருடைய ஜனாசா பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக கொண்டுவரப்பட்டு நல்லடக்கத்திற்காக கொண்டு செல்லப்படுகின்ற அந்த காட்சியும் நல்லடக்கத்திலே கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கோஷங்களை முழங்கியவாறு சென்றனர்.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஜோர்தானியர் செய்த செயலை வெகுவாக பாராட்டும் வகையில் பலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலத்தில் கலந்து கொள்கின்ற காட்சியை இந்த வீடியோ காண்பிக்கிறது.