மாணவர்களுக்கான சீருடை துணி தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Date:

2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்காக 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும் 825 மாணவர்களுக்கான ஆடைகளும் பொதி செய்யப்பட்டு வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சீருடைகள் மற்றும் அங்கிகள் விநியோகிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் மற்றும் சீனத் தூதுவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் சீன அரசாங்கம் மானியமாக சீருடை துணிகளை வழங்கவுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, 100% சீருடைகள் இலவசமாகக் கிடைக்கும், அத்துடன் அரசால் 7,000 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும்.

இந்த சீருடைகளின் முதல் தொகுதி நவம்பர் 13ஆம் திகதியும், இரண்டாவது தொகுதி நவம்பர் 21ஆம் திகதியும், மூன்றாவது தொகுதி டிசம்பர் 20ஆம் திகதியும் இலங்கைக்கு வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...