‘காணாமல் போன ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கைகள் தேடிக் கண்டுபிடிக்கப்படும்’

Date:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு பல அறிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கடைசியாக முன்வைக்கப்பட்ட அறிக்கை காணாமல் போனதாகவும் அறிக்கைகளில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்திருக்கின்ற தகவல்களை விசாரணை செய்து உண்மையான மற்றும் முழுமையான அறிக்கையை விரைவில் தேடிக் கண்டுபிடிப்போம் என இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜுலை மாதம் நியமித்த 3 பேர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை இப்போது முன்னாள் ஜனாதிபதியிடம் இருக்கிறதா அல்லது சட்டமா அதிபரிடம் இருக்கிறதா என்பதையும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஏற்கனவே பல பல குழுக்கள் நிமியக்கப்பட்டிருந்த நிலையில் இனியும் புதிய குழுக்கள் நிமியக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலி ஓய்வை அறிவித்திருந்தாலும் இந்த விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டுள்ள அறிக்கைகளை அவரிடமிருந்து பெற்று விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...