க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் வெளியாகின!

Date:

2024ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை மற்றும் நேர அட்டவணை அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தபாலில் அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இலிருந்து நவம்பர் 18ஆம் திகதி முதல் அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அனைத்து பரீட்சார்த்திகளும் http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் நவம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை திருத்தங்களைச் செய்யலாம் எனவும், பரீட்சை நிலையங்கள் மாற்றப்பட மாட்டாது எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...