பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல் – 76 பேர் பலி!

Date:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்து வருகின்றன. கடந்த வாரம் தொடங்கி பல்வேறு தாக்குதல்களில் 76 பேர் பலியாகி உள்ளனர்

சமீபத்தில், வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த 40 பேர் மீது திடீரென மறைந்திருந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மண்டோரி சார்கெல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 பேரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து, இதே மாவட்டத்தின் பகன் கிராம பகுதியில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்தது.

துப்பாக்கி சூடு மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட தாக்குதல்களில் 21 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று சமரசத்திற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். எனினும், நேற்று முன்தினம் மீண்டும் மோதல் வெடித்தது.

கோஜாகரி, மதசாநகர் மற்றும் குஞ்ச் அலிஜாய் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

6 பேர் காயமடைந்து உள்ளனர். இதனையடுத்து, வன்முறை சம்பவத்திற்கு மொத்த பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், இந்த வன்முறை சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

 

 

 

 

 

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...