இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான தகவல்

Date:

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், புதிய இரத்திரனியல் அடையாள அட்டைகளில் தனி நபர்களை அடையாளப்படுத்தும் உயிரியல் பண்புகளான கைவிரல் அடையாளம், விழித்திரை, குருதி மாதிரிகள் உள்ளடக்கப்படுமென்றும் ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இலத்திரனியல் அடையாள அட்டையின் அறிமுகத்தினால் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள் குறைவடையும் என  எதிர்பார்ப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...