பிரதமரை சந்தித்தார் ஐ.நா.வின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி

Date:

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார்

இதன்போது இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் Adeniyi அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் ஆண் பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கென நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் UNFPA அமைப்பின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிசெய்தார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் ஆண் பெண் சமத்துவம், மகளிரின் பொருளாதார செயற்பாடுகள், ஆண் பெண் சமூகத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை கையாள்கை மற்றும் இலங்கையில் மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிப்பதற்கான தீர்மானமிக்க பணிகள் குறித்தும் அவதானம் செலுத்தினார்.

மேலும் கல்வி தொடர்பில் பெண்களின் பங்களிப்பு மகிழ்ச்சியான மட்டத்தில் காணப்படுவதுடன், தீர்மானம் எடுக்கும் களத்தில் அவர்களின் தலையீட்டை அதிகரிப்பதில் கூடுதல் அவசியம் காணப்படுவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, இலங்கைக்கான UNFPA அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டாண்மை மற்றும் ஆலோசனை பகுப்பாய்வாளர் அனுஷிகா அமரசிங்க, தேசிய வேலைத்திட்டத்தின் பகுப்பாய்வாளர் – ஆண் பெண் சமூகத்தன்மை/GBV பிமலீ அமரசேகர, இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பணிப்பாளர் திலினி குணசேகர உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...