ஜனாதிபதி அனுரவின் கீழ் இலங்கையராக இருப்பதில் பெருமைக்கொள்கிறேன். : விசேட வைத்தியர் மக்காரிம்

Date:

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாட்டை வந்தடைந்தார்.

இந்நிலையில் தனிப்பட்ட விமானத்தில் இல்லாமல் சாதாரண வணிக வகுப்பில் பயணித்த ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் ஏனைய பயணிகளுடன் சகஜமாக கலந்துரையாடினர்.

விமானத்தில் ஏனைய பயணிகளுடன் சரளமாக கதைப்பதையும் உரையாடுவதையும் வெளிநாட்டு பயணிகளிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அதே விமானத்தில் பயணம் செய்த லண்டனில் வசித்து வரும் மாவனல்லையை பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் மக்காரிம் அவர்கள் இது தொடர்பாக தனது பேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

ஜனாதிபதி அவர்கள் அவ்வளவு எளிமையான மனிதர், அவர், வணிக வகுப்பில் பயணித்த பயணிகளிடம் வந்து தனித்தனியாக பேசினார், சில தனிப்பட்ட கேள்விகளையும் கேளுங்கள் என்றார்.

ஜனாதிபதி அவர்களின் எளிமை எங்களுக்கு பெரும் உற்சாகம். அவர் ஒவ்வொரு பயணியிடமும் பேசியது மட்டுமல்லாமல், அவர்களின் கருத்துகளையும் கவனமாக கேட்கும் வகையில் நடந்து கொண்டார். இது மிகச் சிறப்பானதொரு அனுபவம்,” எனக் குறிப்பிட்டார்.

மேலும் அங்கு அவரை வரவேற்க எந்த அதிகாரபூர்வ ஏற்பாடுகளும் அறிவிப்பும் இல்லை, சக பயணிகளுக்கு இடையூறு இல்லை, விமானத்தில் இருந்த பிற நாட்டவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு வியந்தனர்.

அவரது தலைமையில் ‘இலங்கை’ என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்’ எனவும் ஏனைய தலைவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...