அறிமுகமாகவுள்ள டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்: அமைச்சரவை அனுமதி

Date:

தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தற்போது ஸ்மார்ட் அட்டை சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டதட்ட 15 ஆண்டுகள் கடந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நிறுவனங்களுக்கு இடையேயான தரவுப் பரிமாற்ற வசதிகளை வழங்கி புதிய தொழில்நுட்பத்திற்கமைய உலகில் பல நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவது சிறந்ததென அரசு கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...