எம்.பிக்களின் நாளாந்த உணவுக்கான தொகை ரூ.2,000 ஆக அதிகரிப்பு

Date:

பாராளுமன்றத்தில் வழக்கப்படும் உணவுகளின் விலையை அதிகரிக்கும் திட்டம்   அமைச்சரவையின் சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான அமைச்சரவை ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்படும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் சுத்தமான இலங்கை திட்டத்தில் அனைத்து விதமான குறைடுகளுக்கும் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரைகாலமும் காலை உணவு, பகல் உணவு மற்றும் மாலைநேர தேநீருக்காக 450 ரூபாவே அறவிடப்பட்டு வந்தது.

காலை உணவு – 100
பகல் உணவு – 300
மாலைநேர தேநீர் – 50

அதற்கமைய அந்த கட்டணத்தை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு – 600
பகல் உணவு – 1200
மாலைநேர தேநீர் – 200. பெப்ரவரி மாதம் முதல் புதிய விலை அமுலுக்கு வரும்.

 

 

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...