புதிய ஆண்டில் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

Date:

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்றைய தினம்  (02) ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சு  தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் ஜனவரி 24ம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் நடத்த கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பாடசாலை ஆரம்பமானதும் நாளை (03) முதல் இறுதி தவணை பரீட்சைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதியுன் நிறைவடைந்தது.

இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இதன்படி, அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...