சுபோதினி அறிக்கையின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு பட்ஜெட்டில் உள்ளடக்கப்படவில்லை: ஜோசப் ஸ்டாலின்

Date:

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குதல் தொடர்பான ‘சுபோதினி குழு அறிக்கைக்கு’ இவ்வவருடம்  வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லையென  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

குறித்த விவகாரம் தொடர்பாக எதிர்காலத்தில் தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடாத்தப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுபோதினி குழு அறிக்கையின் பிரகாரம், சம்பள முரண்பாடுகளை முற்றிலுமாக நீக்குவதற்கு 46 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும், 2022 பட்ஜெட்டில் இந்த சம்பள முரண்பாடுகளில் 1/3 பங்கு நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவவித்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 06 சதவீதம் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றாலும், இவ்வருடம் வரவு செலவுத் திட்டமும் அதில் கவனம் செலுத்தவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் விவாதித்து, ஒரு பொதுவான தீர்வை எட்டுவேன், பின்னர் அரசாங்கத்துடன் விவாதிப்பேன் என்றும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...