காசாவில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்: முதல்நாளில் 1 இலட்சத்துக்கும் மேல் மாணவர் பதிவு..!

Date:

ஒக்டோபர் 2023 தொடங்கிய இன அழித்தொழிப்புக்கு பின்னர் காசாவில் புதிய ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 23இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் நாளில் காசாவில் பல பாடசாலைகளிலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வருகை பதிவுசெய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

16 மாதங்களுக்கு பின்னர் காசாவில் 165 பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டன. 16 மாத கால இன அழிதொழிப்பில் 12,800 மாணவர்களும் 800 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

காசாவின் 85 வீதமான பாடசாலைகள் (1166) முற்றாக தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. கல்வித்துறைக்கு இழப்பு மட்டும் 2 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...