சிறப்பாக நடைபெற்ற மாவனல்லை ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தினம் தொடர்பான நிகழ்வு

Date:

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால்  பிறப்பு முதல் இறப்பு வரை சேவையாற்றும் கிராம‌ சேவகர்கள் 20 பேரை கெளரவிக்கும் நிகழ்வு மாவனல்லைக் கிளை தலைவர்  எஸ்.ஐ.எம். பஹ்மி தலைமையில் நடைபெற்றது.

04 ஆம் திகதி இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவனல்லை பிரதேச செயலக செயலாளர் வி.ஓ.எல்.எஸ்.ரத்னசேகர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்புரையினை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உப செயலாளர்களில் ஒருவரும் தேசிய கல்வி நிலையத்தின முன்னாள் செயற்திட்ட அதிகாரியுமான ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் பிரதான அம்சமான 20 வருடத்திற்கு மேலாக சேவையாற்றும் 08 கிராம‌ சேவகர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அனைத்து கிராம சேவகர்களுக்கும் தலா 2,000.00 ரூபாய் பெறுமதியான ஒரு வருடத்திற்குத் தேவையான காகிதாதிகள் வழங்கப்பட்டன.

வழமைப் போன்று மாவனல்லை பிரதேச செயலகத்திற்கும் ஒரு வருடத்திற்கு தேவையான காகிதாதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜமாஅத் ஆண், பெண் அங்கத்தவர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தினர் சுமார் 50 பேரளவில் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...