பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த முஸ்லிம் நபர் உயிருடன் எரித்துக் கொலை

Date:

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சாஜித் என்பவரின் மனைவி ஓர் இந்துத்துவ தீவிரவாத போக்குடையவரால் கற்பழிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாவதற்கு சில நாட்களே இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை சாஜித் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து குடும்பத்தார் தகவல் தருகையில்,

2022 ஜின் மாதத்தில் சாஜித்தின் மனைவி பஹோலா யாதவ் என்பவரால் மிருகத்தனமான முறையில் கற்பழிப்புக்குள்ளானர்  இந்த யாதவ் செல்வாக்கு மிக்க அப்பிரதேச தலைவராவர்.

தனது வீட்டுக்கு சமையல் வேலைக்காக வரும்படி அழைத்த யாதவ் குறித்த பெண்ணை தனது ஆசைக்கு இணங்குமாறு கோரியுள்ளார். இதனை மறுத்த அப்பெண்ணை யாதவ் பலாத்கரமாக கற்பழித்ததோடு குடும்பத்தாரை தீர்த்துக்கட்டுவதாகவும் எச்சரித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை கொடுக்க சென்ற போது அதனை தடுக்க  கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

இருப்பினும் முறைப்பாடு செய்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சாஜித்தின் மனைவி இருந்ததால் அவரைக் கடத்திச் சென்று சுமார் 4 மாதங்கள் தடுத்து வைத்து இந்த விவகாரம் வெளியில் வராதவாறு செய்தனர் என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சஜித்தின் எரிந்த அடையாளம் காண முடியாத உடல் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டது. டீசலில் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஒரு இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, யாதவின் அடியாட்களால் தாக்கப்பட்டு,  பின்னர் தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...