தேடுதல் நடத்தியும் பிடிபடாத தேசபந்து தென்னகோன்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

Date:

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் 5 வீடுகளையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

கொழும்புக்கு அருகிலுள்ள இரண்டு சொகுசு குடியிருப்பு வளாகங்களில் இரண்டு வீடுகளும், கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளிலுள்ள மூன்று வீடுகளும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த சுற்றிவளைப்பின் மூலம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, மாத்தறை வெலிகம, பெலேன பகுதியிலுள்ள W15  உணவகமொன்றுக்கருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாகவே  முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகின்றார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், கொழும்பு குற்றப்பிரிவின் சார்ஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டு மற்றொரு அதிகாரி ஒருவரும் காயமடைந்திருந்தார்.

வெலிகம W15 ஹோட்டல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மகனான முகமது இஷாம் ஜமால்தீனுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரின் சோதனை நடவடிக்கையில், தேசபந்து தென்னகோன் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதை தடுக்கும் வகையிலான பயணத்தடையையும் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...