தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (மஜக) தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள், தற்போதைய கத்தார் பயணத்தின் போது கத்தார் தேசிய நூலகத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்த மூத்த நூலகர் துபைல் அவர்களை சந்தித்ததுடன், விழுமியம் சஞ்சிகையை வழங்கினார்.
அதற்கு முன்னதாக, இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்றிருந்த போது, தமிமுன் அன்சாரிக்கு விழுமியம் சஞ்சிகையை அதன் ஆசிரியர் குழுவினர் கையளித்தனர்.
இதை தமிழ் வருகையாளர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறும் முன்னணி நூலகங்களின் பணிகள், கல்வி வளர்ச்சி, மொழி பாதுகாப்பு ஆகியவற்றில் தமிழர்கள் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும் என அவர் உறுதிப்படுத்தினார்.