‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ரணில் வெளியிடவுள்ள சிறப்பு அறிக்கை!

Date:

‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.

‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கையை இன்று (14) சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்ததுடன் இது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பட்டலந்தா அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை முடிவை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை முன்மொழிய ஒரு சிறப்பு குழுவை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடத்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...