Thursday, November 12, 2026

இத்தாலிக்கு பயணமானார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

1 min read · 2 reads
xr:d:DAFQ2BHYPpI:113,j:44678968668,t:23010503

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று புதன்கிழமை (23) காலை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே  பேராயர்  இத்தாலிக்கு பயணமாகியுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 09.30 மணியளவில் அபிதாபி சென்று பின்னர் அங்கிருந்து மற்றுமொரு விமானம் ஊடாக இத்தாலிக்கு செல்ல உள்ளார்.

இதேவேளை பாப்பரசர் பிரான்சிஸின் மறைவையொட்டி வெற்றிடமாகியுள்ள பாப்பரசர் பதவிக்கான மாநாட்டில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.