ஊடகவியலாளர் பஸீரை நீதிமன்றிலிருந்து வெளியேற்றிய பொலிஸார்’: பதில் பொலிஸ் மா அதிபரிடம் முஸ்லிம் மீடியா போரம் முறைப்பாடு

Date:

ஊடகவியலாளர் பஸீரின் ஊடக செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்தி அவரை குளியாப்பிட்டிய நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் அதிகாரிகள் வெளியேற்றியமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முஸ்லிம் மீடியா போரம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளது.

முறைப்பாட்டில், இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளரான, புலனாய்வு ஊடகவியலாளரான எம்.எப்.எம்.பஸீரின் நீதிமன்ற அறிக்கையிடலுக்கு தடையை ஏற்படுத்திய இரு பொலிஸார், பலவந்தமாக அவரை நீதிமன்றிலிருந்து வெளியில் இழுத்துச்சென்றுள்ளனர்.

உண்மை அறியும் மக்களின் உரிமைக்கு மதிப்பளித்து, நீதி வழங்குவதில் தீவிரமாகத் தலையிடும் ஊடகவியலாளர். இப்படிப்பட்ட ஒருவருக்கு பொலிசார் செய்த இந்த அநியாய சம்பவத்தை நமது நாட்டில் உள்ள ஜனநாயக ஊடக சுதந்திரத்திற்கு அடித்த மரண அடியாகவே பார்க்கிறோம்.

இது மிகவும் அநீதியானது சுதந்திரமாக செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தல். இது சுதந்திரமான அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் உரிமையில் நியாயமற்ற தலையீடு ஆகும்.

இதனடிப்படையில்  இந்தச் சம்பவம் தொடர்பில் உங்களது விசேட கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி வழங்குவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், எமது நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் தமது பணியை சுதந்திரமாக மேற்கொள்ளும் உரிமையை மதித்து, அதில் தலையிட வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்துமாறு மேலும் கேட்டுக்கொள்கின்றோம் என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற செய்தியாளரான பஸீர் குளியாபிட்டி நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றை அறிக்கையிடுவதற்காக சென்றிருந்தார்.

இதன்போது மன்றிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் “இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய். வெளிய போ.” என பஸீரை அச்சுறுத்தியிருக்கிறார்.

வழக்கு விசாரணை இடம்பெற்றுகொண்டிருந்ததால் பஸீர் தொடர்ந்து வழக்கு விசாரணை நடவடிக்கைகளை அறிக்கையிட்டு கொண்டிருந்தார். பஸீரின் ஊடக செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்தி அவரை அச்சுறுத்திக்கொண்டிருந் பொலிஸ் அதிகாரி மன்றிலிருந்து வெளியில் சென்று, வெளியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை அழைத்துகொண்டு வந்திருக்கிறார்.

இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து பஸீரின் கையை பிடித்து பலவந்தமாக நீதிமன்றுக்குள் இருந்து வெளியில் தள்ளியிருக்கிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்துக்கொண்டு சென்றிருந்த நிலையில், முறையான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...