பலஸ்தீனத்தில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டம்

Date:

பலஸ்தீனத்தில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி,நேற்று (23) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பலஸ்தீன குழந்தைகளின் வாழும் உரிமையை உறுதிப்படுத்து, கொழும்பிலிருந்து காசா வரை, கொலையை நிறுத்துங்கள், ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், பலஸ்தீனத்தை விடுவிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட சுலோக அட்டைகளை போராட்டக்காரர்கள்  ஏந்தி நின்றனர்.

பலஸ்தீனத்தில் இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தலைவர் எம்.என்.எம். ஷாம் நவாஸ் உட்பட சமூக செயற்பாட்டாளர், பலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...