பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடலாம்!

Date:

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும்.

எனவே, பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றால் பாடசாலை அதிபர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு அளிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ncpa@childprotection.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடு அளிக்க முடியும்.

அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்கு சென்றும் ( இல. 330, தலவத்துகொட வீதி, மாதிவெல, ஶ்ரீ ஜயவர்தனபுர) முறைப்பாடுகளை அளிக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...