மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி: 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு!

Date:

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்த 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.

சம்பவத்தை அடுத்து மே 4 ஆம் திகதி மாணவியின் பெற்றோர், ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர்.

அதன்படி, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதற்கிடையில், சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு அளித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Popular

More like this
Related

மன்னிப்பின் உயரிய முன்மாதிரி: சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் அனோஜனுக்கு இராஜதந்திர வழியில் மன்னிப்பு பெறக் கோரிக்கை!

தனது வாழ்நாளில் தனக்கு சொல்லொணாத் துயரங்களையும் அவமானங்களையும் ஏற்படுத்தியவர்களைக்கூட மன்னித்தவர் முஹம்மது...

சவூதி மரண தண்டனையிலிருந்து மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி...

சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: அரசாங்கம் உடனடியாக தலையிட சாணக்கியன் எம்.பி அவசர கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் சிவராசா...

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன...