‘2026 FIFA World Cup இல் பலஸ்தீனுக்காக கோஷம் எழுப்புவது தடுக்கப்பட மாட்டாது’- ட்ரம்பின் கருணை

Date:

2026 FIFA உலகக் கோப்பையில் பலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அனுமதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று (07) பல அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் FIFA  தலைவர் கியானி  இன்பான்டினோவுடன் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது  ட்ரம்ப் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன் போது பலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றவர்கள் உலகக் கோப்பையில் கலந்துகொள்வது குறித்து கவலைப்பட வேண்டுமா என்று கேட்டபோது,

அமெரிக்காவில் 2026 உலகக் கோப்பையின் போது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தடை செய்யப்படாது என்று டிரம்ப் விளக்கினார்.

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதை நியாயமான முறையில் செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.

2026 FIFA உலகக் கோப்பை 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் 2026  ஜூன் 11 முதல் ஜூலை 19, வரை நடைபெறும்.

இந்தப் போட்டி அமெரிக்காவிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...