நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார சவால்களை சமாளிக்க முடியும்: ஜனாதிபதி அநுரவை சந்தித்த தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி கருத்து

Date:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது

அதன்படி இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக இருந்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதி ம்பெக்கி, இதுபோன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் கூறினார்.

 

தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரம் இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதால் இரு நாடுகளும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.

அத்துடன் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதில் இலங்கை ஜனாதிபதியுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க சவால்களை இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று ம்பெக்கி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...