18 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சாம்பியனான RCB: விராட் கோலி நெகிழ்ச்சி!

Date:

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கின்றது. இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், பட்டம் வென்றது குறித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார்.

 “இந்த வெற்றி அணிக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ரசிகர்களுக்கும் முக்கியம். இதற்காக 18 வருடங்கள் காத்திருந்தோம். இந்த அணிகக்க எனது இளமை, ஃப்ரைம் ஃபார்ம் மற்றும் அனுபவத்தை தந்துள்ளேன். என்னிடம் உள்ள அனைத்தையும் தந்துள்ளேன். இந்த நாள் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கடைசி பந்து வீசியவுடன் மிகவும் உணர்ச்சி வசமானேன்.

ஆர்சிபி அணிக்காக டிவில்லியர்ஸ் நிறைய செய்திருக்கிறார். அதனால் இந்த ஆட்டத்துக்கு முன்பு, வெற்றியில் நீங்களும் இருக்க வேண்டும் என சொன்னேன்.

அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டார். இருந்தாலும் இந்த அணிக்காக அதிக முறை ஆட்ட நாயகன் விருதை வென்றது அவர் தான். அவர் எங்களுடன் வெற்றி மேடையில் இருப்பார்.

நான் இந்த அணிக்கு விசுவாசமானவனாக உள்ளேன். அது எதுவாக இருந்தாலும் சரி. நான் வேறுவிதமாக நினைத்த தருணங்களும் இருந்தது உண்டு. ஆனால், நான் இந்த அணியிலேயே இருந்தேன். என் இதயம் பெங்களூரு உடன் உள்ளது, என் ஆன்மா பெங்களூரு உடன் உள்ளது. நான் ஐபிஎல் விளையாடும் வரை அது என்றென்றும் ஆர்சிபி அணிக்காகத்தான் விளையாடுவேன்.

இன்றிரவு நான் ஒரு குழந்தையைப் போல தூங்குவேன். இறுதியாக என் மடியில் ஐபிஎல் கோப்பையை கொடுத்த இறைவனுக்கு நன்றி.

அணியின் நிர்வாகமும், குழுவும் சிறப்பானது. ஏலத்தின் போது எங்களை நோக்கி கேள்விகள் இருந்தது. அதை அடுத்த நாளில் சரி செய்தோம். இந்த தருணம் என் கரியரில் சிறந்த தருணங்களில் ஒன்று. இருந்தாலும் இது டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஐந்து ரேங்க் பின்தங்கி உள்ளது. எல்லோரிடத்திலும் மதிப்பை பெற வேண்டுமென்றால் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைத் தேர்வு செய்ய வேண்டும்” என கோலி தெரிவித்தார்.

இது 18-வது ஐபிஎல் சீசன். கோலியின் ஜெர்ஸி நம்பரும் 18. அந்த வகையில் அந்த இரண்டும் சேர்ந்து கோலிக்கு இப்போது ஐபிஎல் சாம்பியன் என்று அடையாளத்தை வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...