தேசிய ஒற்றுமையை உருவாக்க சுற்றாடலைப் பயன்படுத்த முடியும்: உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர

Date:

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கேகாலையில் இன்று (05) முற்பகல் நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

“பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்” முக்கிய கருப்பொருளை முதன்மைப்படுத்தி “துளிர்விட இடமளியுங்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்முறை உலக சுற்றாடல் தினத்தில் பல சாதகமான நடவடிக்கைகளை எடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பொதுவான தேசிய உணர்வின் மூலம் பூமியில் அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உள்ளது. எனவே, தேசிய ஒற்றுமையை உருவாக்க சுற்றாடலைப் பயன்படுத்த முடியும்

 

நமது நாட்டின் அழகிய சுற்றுச்சூழல் அமைப்பை அழித்த துயரத்திற்கு, இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தின் செயல்கள் காரணமாக அமைந்தன. அந்த சகாப்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். அதன்படி, தற்போது அதிகாரிகள் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டினார்.

 

அத்தோடு, சுற்றாடலை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்கான பிரஜைகளின் பொறுப்பையும் இதன்போது  நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்வில் பந்துல பெத்தியாவின் வாழ்விடமானது சரணாலயமாக அறிவிக்கப்படல், நில்கல உள்ளிட்ட புதிய வனப்பகுதிகள் குறித்த நான்கு வர்த்தமானிகளை வெளியிடல், சூழல் நேய மாதிரிப் பாடசாலைகள் மற்றும் பசுமைப் புகையிரத நிலையங்களை பாராட்டல் என்பன இடம்பெற்றன.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...