நிதி அமைச்சின் புதிய செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்

Date:

நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளராக இருந்த மஹிந்த சிறிவர்தன குறித்த பதவியை சமீபத்தில் இராஜினாமா செய்ததோடு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக இயக்குனராக பதவியேற்கவுள்ளார்.

 

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன சூரியப்பெரும, தற்போதைய அரசாங்கத்தில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பணியாற்றியதோடு, மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள நிதி அமைச்சின் செயலாளர் பதவியை பொறுப்பேற்பதற்காக கடந்த வாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...