பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் 09 ஆவது சர்வதேச தமிழியல் மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(06) பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்க மண்டபத்தில் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சிறி .பிரசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
அத்துடன் இந்த ஆய்வு மாநாடு ஐந்து அமர்வுகளாக நடைபெறவுள்ளது. பல்வேறு துறை சார் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் தமிழியல் ஆய்வை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டின் முதலாவது அமர்வில் வரலாற்று ஆய்வாளர், நூல் திறனாய்வாளருமான சிராஜ் மஷ்ஹூர் ‘தமிழின் பன்மைத்துவத்தில் ‘இஸ்லாமியத் தமிழின்’ வகிபாகம் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கவுள்ளார்.