அரசாங்கத்திற்கு ரூ. 1.7 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் லக்‌ஷ்மன் யாப்பாவிற்கு குற்றப்பத்திரிகை

Date:

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவியேற்ற இரண்டாம் வருடத்தை நினைவுகூர, லக்ஷ்மன் யாபா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த காலத்தில், இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 1.7 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அதனடிப்படையில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள குறித்த இருவருக்கும் எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...