ஈரான் இலங்கையின் விழியோரம் மறைந்துள்ள கண்ணீரை அறிந்த நாடு: மஞ்சுள கஜநாயக

Date:

இலங்கை இராணுவத்துக்கும் இராணுவத்துக்கு எதிராகப் போராடிய LTTE இனருக்கும் ஏக காலத்தில் பயிற்சி வழங்கி எம்மை இஸ்ரேல் ஏமாற்றியது.

நெருக்கடியான காலங்களில் இலங்கைக்கு உதவிய நாடு ஈரான் என்பதை நாம் மறக்கக் கூடாது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது எமக்கு கடன் அடிப்படையில் எண்ணெய் வளத்தை அது பெற்றுத் தந்தது.

ஈரானுடனான நட்புறவை இலங்கை தொடர்ந்தும் பாதுகாத்துப் பேணி வர வேண்டும் என ஜனநாயக சீர்திருத்தத்துக்கும் தேர்தல் கற்கைகளுக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக தெரிவித்தார்.

ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கங்கள் குறித்து, உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிபுணத்துவக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம். அமீன் தலைமையில் இந்த நிகழ்வு நேற்று (26) மாலை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்த யுத்தத்தின் பூகோள ரீதியான தாக்கம் குறித்து சர்வதேச விவகாரங்கள் ஆய்வாளரும் பன்னூலாசிரியருமான கலாநிதி ரவூப் ஸெய்ன் உரையாற்றினார்.

அவர் தனது உரையில் இந்த யுத்தம் நீடித்தால் வரப்போகும் விளைவுகளை முன்வைத்ததோடு, அணு ஆயுதம் இருக்கின்றது என்ற பயத்தினால் ஒரு நாட்டை இன்னொரு நாடு தாக்குவதாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை எதற்கு, சர்வதேச சட்டங்கள் ஏன் என கேள்வி எழுப்பினார்.

நிகழ்ச்சியை உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் அமீன் இஸ்ஸதீன் நெறிப்படுத்தினார். பேராசிரியர் ஹுஸைன் மியா, இலங்கையிலுள்ள ஈரானியக் கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் இங்கு கருத்து வெளியிட்டனர்.

வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினர் பியாஸ் முஹம்மத் நன்றியுரை வழங்கினார்.

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...