ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரவு முழுவதும் வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வகையில் அமைச்சரவை அனுமதி

Date:

ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரவு முழுவதும் வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வகையில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

1954 ஆம் ஆண்டின் 19 இலக்க கடை அலுவலக ஊழியர்களின் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் மூலம் கடை அலுவலக ஊழியர்களின் சேவை வசதிகள், சேவைக்காலம், மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை தொடர்பான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்துக்கமைய தொழில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு ஏற்புடைய ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலிலுள்ள ஒழுங்கு விதிகளின் கீழ் 18 வயது பூர்த்தியடைந்த ஒரு பெண் ஊழியர் தங்குமிட ஹோட்டலில் வரவேற்பு அலுவலரின், பெண்கள் அங்கி அறை ஊழியரின், பெண்களின் ஆடை அறை ஊழியரிகளின் அல்லது பெண்களின் மலசலகூட ஊழியரின் கருமங்களில் பிற்பகல் 6.00 மணிக்கு பின்னர் மற்றும் முற்பகல் 6.00 மணிக்கு முன்னர் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்.

இருந்த போதிலும் வதிவிட ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணியில் ஈடுபட்டுள்ள உணவு மற்றும் பானங்களை வழங்கும் பெண் ஊழியர்கள் இரவு 10.00 மணிவரை மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படலாம் என்பதனால், குறித்த நடவடிக்கை செயற்பாடுகளை பேணும் போது பல்வேறு சிக்கல் நிலை தோன்றலாம் என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, தங்குமிட ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணியில் ஈடுபட்டுள்ள உணவு மற்றும் பானங்களை வழங்கும் கருமங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு கூடுதலான பெண் ஊழியர்கள் பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னரும், முற்பகல் 6.00 மணிக்கு முன்னரும் பணியில் ஈடுபடக்கூடிய வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 இலக்க கடை அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 3 ஆவது ஒழுங்குவிதியை திருத்தம் செய்வதற்காக தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...

பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து...

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...