2025.07.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழு மற்றும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு ஆகியவை இணைந்து ஒழுங்கு செய்த ‘நல்லிணக்கமும், ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தலைப்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சியானது சேனபுர-வவுனியா புனர்வாழ்வு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் ஆளணியினரான அஷ்-ஷைக் ஸபருல்லாஹ், சகோதரர் ரம்ஸி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
புனர்வாழ்வு பெறும் இளைஞர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தல், அவர்களிடையே நல்ல சிந்தனைகளை விதைத்தல் மற்றும் எதிர்காலத்தில் சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புதல் போன்ற குறிக்கோள்களின் அடிப்படையில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.