புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

Date:

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய காவல்துறை அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு செய்வதற்காக பொதுமக்களுக்காக வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் குறித்த வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளன.

காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டாலோ அல்லது சரியான சேவையை வழங்கவில்லை என்றாலோ 0718598888 குறித்த வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகள் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதிய காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

புதிய காவல்துறை மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...